இந்திய உச்ச நீதிமன்றத்தில் 250 Junior Court Assistant வேலைவாய்ப்பு 2026: Any Degree படித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்திய உச்ச நீதிமன்றம் (Supreme Court of India) காலியாக உள்ள 250 Junior Court Assistant (JCA) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை (F.6/2026-SC (RC)) வெளியிட்டுள்ளது.

ஏதேனும் ஒரு டிகிரி (Any Degree) முடித்தவர்கள், கணினியில் ஆங்கில தட்டச்சு வேகம் உள்ளவர்கள் இந்த மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் வேட்பாளர்களுக்கு மாதம் ₹35,400 ஆரம்பச் சம்பளமாக வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு சுருக்கம் (Overview)

விவரங்கள்முழு விபரம்
நிறுவனம்இந்திய உச்ச நீதிமன்றம் (Supreme Court of India)
பதவியின் பெயர்Junior Court Assistant (JCA)
காலியிடங்கள்250
பணியிடம்இந்தியா முழுவதும் (New Delhi)
சம்பளம்மாதம் ₹35,400/-
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் (Online)
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்07.10.2026
விண்ணப்பிக்க கடைசி நாள்28.10.2026

கல்வித்தகுதி (Educational Qualification)

  1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும்.
  2. கணினியில் நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 35 வார்த்தைகள் (35 w.p.m.) ஆங்கில தட்டச்சு வேகம் (English Typing Speed) இருக்க வேண்டும்.
  3. கணினி இயக்கம் (Computer Operation) குறித்த அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு & வயது தளர்வு (Age Limit & Relaxation)

  • பொதுப் பிரிவினர்: 18 முதல் 30 வயது வரை.

வயது தளர்வு (Upper Age Relaxation):

  • SC / ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS): 10 ஆண்டுகள்
  • PwBD (OBC): 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST): 15 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம் (Application Fee)

  • General / OBC பிரிவினர்: ₹1,000/-
  • SC / ST / Ex-Servicemen / PwBD பிரிவினர்: ₹750/-
  • செலுத்தும் முறை: ஆன்லைன் மூலம் (Net Banking / Debit Card / Credit Card / UPI).

தேர்வு செய்யும் முறை (Selection Process)

விண்ணப்பதாரர்கள் பின்வரும் 4 கட்டத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. எழுத்துத் தேர்வு (Objective Type Test): பொது அறிவு, ஆங்கிலம், மற்றும் கணினி அறிவு சார்ந்த வினாக்கள்.
  2. கணினி தட்டச்சுத் தேர்வு (Typing Speed Test): Computer Typing Speed Test.
  3. விவரிக்கும் தேர்வு (Descriptive Written Test): ஆங்கிலக் கட்டுரை எழுதுதல், சுருக்கி எழுதுதல் போன்றவை.
  4. நேர்முகத் தேர்வு (Interview): நேரில் நடத்தப்படும் இறுதி நேர்காணல்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

  1. உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதமான sci.gov.in பகுதிக்குச் செல்லவும்.
  2. Recruitment பிரிவில் Junior Court Assistant Recruitment 2026 என்ற அறிவிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. Apply Online என்பதைக் கிளிக் செய்து, உங்கள் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுப் பதிவு செய்யவும்.
  4. உங்கள் கல்வித் தகுதி, முகவரி போன்ற விவரங்களைச் சரியாகப் பதிவு செய்யவும்.
  5. கோரப்பட்டுள்ள வடிவம் மற்றும் அளவில் புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களை அப்லோட் செய்யவும்.
  6. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி, படிவத்தைச் சரிபார்த்து Submit செய்யவும்.
  7. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது PDF வடிவில் சேமித்து வைத்துக்கொள்ளவும் (அஞ்சலில் அனுப்ப வேண்டியதில்லை).
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.10.2026Updated Soon
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *